LATEST FUNNY KURAL - READ - LAUGH - THINK
- அகர முதல எழுத்தெல்லாம் தகர சிள்ளய்டில் எழுதி பழகு
- பிட் அடித்து வாழ்வாரே வாழ்வார் அக்டோபரில் ஆஜராவார்
- பீடியால் சுட்ட புண் உள்ளாறும் ஆறாதே பிராந்தியால் வெந்த வயிறு
- பெல்என்ப ஏனைய பிரேக் என்ப அவ்விரண்டும் கண் என்பநம் சைக்கலுக்கே
- போடுக தண்ணி போடுக போட்டபின் ஆடுக அதற்கு தக
- கணினி யார் யார் வழி கர்கினம் சுயமாய் மென்பொருள் காண்பது அறிவு
- கற்க கசடற கணினி கல்வி கற்ற பின் வேற்று நாடு செல்க அதற்கு தக
- வரிகட்டி வாழ்வரே வாழ்வார் மற்றவரெல்லாம் ரைடு வந்து பீதி கொள்வர்
- அவுட் கோஇங் காலியான போதும் சிறிது இன்கமிங் கேட்க படும்
- முடிந்த வரை முயற்சிப்பது முயற்சி அல்ல முடியம்வரை முயற்சிப்பதேமுயற்ச்சி
- கஷ்டம் வரும்வரை கடவுளைகண்டு கொள்ளாதவர்கள் கடவுளை நினைப்பர்கஷ்டம் வரும்போது
- அடுத்தவர் துன்பங்கண்டு கண்கலங்காதவர் மனம் டிவி சீரியல் பார்த்து கலங்கும்
- வட்டிக்கு பணம் வாங்கி வட்டி கட்டவிட்டால் வட்டி போட்டுவிடும் குட்டி
- கால்விழுந்து ஓட்டுவாங்கும் அரசியல்வாதி தன்கால் விழவைப்பர் ஜெயத்தபிறகு
- ஆயிரமாயிரமாய் சாமிக்கு செலவழிப்பர் எல்லாம் ஐயோபாவமென்று இரங்கார் ஏழை க்கு